அனைத்து விதமான கற்கையாளர்களுக்கும் ஏற்ற பரந்துபட்ட கற்கைநெறிகளை நாம் கொண்டுள்ளோம். ஆகவே உங்கள் வயது, நிலை அல்லது உங்கள் நோக்கம் எதுவாக இருப்பினும் உங்களுக்குப் பொருத்தமான கற்கைநெறி ஒன்றை நாம் கொண்டுள்ளோம்.
முதல் நாளில் இருந்தே நீங்கள் வகுப்பறையில் ஆசிரியருடனும் ஏனைய மாணவர்களுடனும் தொடர்புகொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவீர்கள். நீங்கள் அதிகளவு பேசும்போது, மொழியை கற்பதும் இலகுவாக அமையும்.
மிகவும் பயனுறுதியுள்ள முறையில் மகிழ்ச்சிகரமான சூழலில் உங்களுக்குக் கற்பிப்பதே எமது நோக்கம். பின்வரும் சந்தர்ப்பங்களில் மொழிக்கற்கை மிகவும் வெற்றிகரமானதாக அமையுமென நாம் நம்புகின்றோம் :
- மன அழுத்தமற்ற சூழலில் இடம்பெறும் பொழுது
- மாணவர்கள் உற்சாகத்துடன் பாடங்களில் பங்கேற்றல் மற்றும் சவாலாகவும், தூண்டும் விதமாகவும் கற்கை அமைதல்
- அனைத்து கற்கை முறைகளையும் திருப்தி செய்யும் விதமாக பலதரப்பட்ட ஊடகங்கள் மற்றும் செயற்பாடுகள் பயன்படுத்தப்படல்
- ஆசிரியர்கள் நேர்மறையாகவும், ஒத்துழைப்பாகவும் இருப்பதோடு, பலதரப்பட்ட உபகரணங்களை கையாளக் கூடியதாக இருத்தல்
- வகுப்பறை மற்றும் வீட்டு செயற்பாடுகளைக் கொண்டு பேச்சு மற்றும் எழுத்து ஆங்கிலம் தொடர்பான அனைத்து பகுதிகளிலும் மாணவர்களின் முன்னேற்றம் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுதல்