IELTS பரீட்சைக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வது IELTS பரீட்சையில் அவசியமான புள்ளிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது. அத்துடன் IELTS இனது இணை உருவாக்குனர்கள் என்ற வகையில் எம்மை விட உங்களுக்கு வேறு எவராலும் சிறப்பாக உதவிட முடியாது. எமது IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் பரீட்சையின் பெறுபேறுகள் சாதகமாக அமைவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்கைநெறியிலும் பங்கேற்பவர்கள் 20 பேருக்கு மிகையாகாதவாறு பேணப்படுவதால், உங்கள் ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் தனிப்பட்ட கவனத்தையும், பரீட்சையின் ஒவ்வொரு பிரிவையும் அணுகுவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவீர்கள்.

IELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)
இத் துரித தயார்படுத்தல் கற்கைநெறி IELTS பரீட்சையின் கல்விசார் மற்றும் பொது பயிற்சி அலகுகளுக்கு பரீட்சார்த்திகளை தயார்படுத்துகிறது.