IELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)
ஐந்து வாரங்கள் நீடிக்கும் இவ் 20 மணித்தியால துரித தயார்படுத்தல் கற்கைநெறி தவணையென்றிற்கு இருமுறை வழங்கப்படுவதோடு, IELTS பரீட்சையின் கல்விசார் மற்றும் பொது பயிற்சி அலகுகளுக்கு பரீட்சார்த்திகளைத் தயார்படுத்துகிறது. தேவைகள் மற்றும் நிலைக்கேற்ப நீங்கள் பின்வரும் வகுப்புகளில் ஒன்றிற்கு இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்:
- IELTS தீவிர தயார்ப்படுத்தல் Lower (Pre-Intermediate 2 – Intermediate 3)
- IELTS தீவிர தயார்ப்படுத்தல் Higher ( Upper Intermediate 1 and above)
IELTS தீவிர தயார்ப்படுத்தல் கற்கைநெறியை பின்பற்றும் நீங்கள்
- முக்கிய திறன்கள் மற்றும் பரீட்சை நுட்பங்களை விருத்தி செய்வீர்கள்
- IELTS மாதிரி செயற்பாடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டு அதற்கான பின்னூட்டத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்
- உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு உங்களை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வீர்கள்
நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், கற்கைநெறி ஒன்றை தொடர நீங்கள் பொருத்தமான நிலையில் உள்ளீர்களா என்பதை அறிந்து கொள்;வதற்காக ஆங்கில மட்டத் தேர்வு ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும்.