உங்கள் ஆங்கில நிலையை அறிதல்
பதிவு செய்வதற்கு முன் நீங்கள் ஆங்கில மட்டத் தேர்வு ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். இச் சோதனை உங்கள் நிலைக்குரிய பொருத்தமான வகுப்பில் உங்களை இணைப்பதற்கு உதவும். சோதனைக்கு பதிவு செய்ய அழையுங்கள் 011 – 7521521. அத்துடன் நீங்கள் நேரடியாக வருகைதந்து பதிவு செய்யவும் முடியும்.
நீங்கள் பின்வருவனவற்றை உங்களுடன் கொண்டு வருதல் வேண்டும்:
- வயது வந்தவர்கள் - தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு மற்றும் ரூ.1000 (மீளப்பெற முடியாதது)
- இளம் கற்கையாளர்கள் - பிறப்பு அத்தாட்சி பத்திரம் மற்றும் ரூ.1000 (மீளப்பெற முடியாதது)
ஆங்கில மட்டத் தேர்வுகள் தவணை ஆரம்பிப்பதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன் நடாத்தப்படும். எமது அடுத்த ஆங்கில மட்டத் தேர்வு பற்றி அறிந்துகொள்ள எம்மை அழையுங்கள்.
உங்கள் கற்கைநெறி புத்தகத்தை வாங்குதல்
உங்கள் கற்கைநெறிக்கான பதிவினை மேற்கொண்டதும் அவசியமான புத்தகத்தை நீங்கள் வாங்குதல் வேண்டும். நீங்கள் அதனை யாழ் பிரிட்டிஷ் கவுன்சிலில் கொள்முதல் செய்யலாம்.
உங்கள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்
உங்கள் வகுப்பு அதிகபட்சம் 20 மாணவர்களை கொண்டிருப்பதோடு, உங்கள் ஆசிரியர் ஐக்கிய இராச்சிய தகைமை பெற்ற வல்லுனர் ஒருவராக இருப்பார்.
எமது ஆசிரியர் குழாம் பல்வகை ஆசிரியர்களைக் கொண்டமைந்துள்ளதோடு, ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி மற்றும் ஐக்கிய இராச்சியமானது ஒரு பல் கலாச்சார சமூகம் என்பதை அது பிரதிபலிக்கிறது. அத்தோடு எமது அனைத்து ஆசிரியர்களும் ஐக்கிய இராச்சியத் தகைமைகளைக் கொண்டிருப்பதுடன், அதியுயர் கற்பித்தல் தரம் மற்றும் பயனுறுதி உடனான கற்றல் அனுபவத்தை அவை உறுதி செய்கின்றன. எமது கற்கை அங்கங்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உரியவை என்பதனால் அவை கற்கைக்கு மேலும் கலாச்சார பெறுமதியை சேர்க்கின்றன.
நூலக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
ஆங்கிலம் கற்கும்போது நீங்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். அதனாலேயே நாம் அனைத்து மாணவர்களுக்கும் உங்கள் நிலைக்கு பொருத்தமான கற்கை அங்கங்களைக் கொண்டுள்ள மேற்கோள் நூலகத்தின் இலவச அங்கத்துவத்தை பெற்றுத் தருகின்றோம்.
எமது பிரதான நூலகத்தில் இணைய நீங்கள் முடிவு செய்திருப்பின், எமது நூலகம் 3000க்கு மேற்பட்ட நூல்கள், டிவிடிகள், வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளைக் கொண்டுள்ளது. உங்களால் கதை சொல்லும் அமர்வுகள், கற்கை ஆற்றல் பட்டறைகள் மற்றும் எமது பேச்சு மன்றத்திலும் இணைய முடியும். எமது நூலக சேவைகள் பற்றி மேலும் அறிய எமது கிளைக்கு விஜயம் செய்யுங்கள்.