எமது அனைத்து வகுப்பறைகளும் சௌகரியமானவை, குளிரூட்டப்பட்டவை அத்தோடு கற்கைக்கு ஏற்ற சகல வசதிகளையும் கொண்டவை. நாம் உங்கள் பிள்ளையின் கற்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் வெண்பலகை தொழில்நுட்பம், ப்ரொஜெக்டர்கள், டிவிடி/சிடி ப்ளேயர்கள் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பவற்றைப் பயன்படுத்துகிறோம். எமது இளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் மற்றும் இரண்டாம்நிலை கற்கைநெறிகளுக்கான ஆங்கில வகுப்புகளின் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை 20 ஆகும்.
வயது வந்தவர்களுக்கான கற்கைநெறி ஒன்றை நீங்கள் எம்முடன் மேற்கொள்ளும்போது, எமது நூலகத்தின் ஆங்கில கற்கை சேவைகளுக்கான இலவச மேற்கோள் அங்கத்துவமும் கிடைக்கப்பெறும். இதன் மூலம் உங்களுக்கு கிடைப்பவை :
- சுய கற்கைக்கு உதவும் ஆங்கிலக் கற்றல் வள ஆதாரங்கள்
- உங்கள் கற்கை நெறியின் ஒவ்வொரு நிலைக்கும் அவசியமான ஒத்துழைப்பை பெற்றுத்தரும் வளங்களுக்கு வழிகாட்டும் பரந்துபட்ட சுய கற்றல் வழிமுறைகள்
- ஆங்கில மொழி பரீட்சைகளுக்கான (IELTS, CELA) பயற்சி அங்கங்கள்
- Iஎமது கற்பித்தல் நிலையத்தில் வயதுவந்த மாணவர் / இளம் கற்கையாளர் ஒருவராக நீங்கள் பதிவு செய்தால், நூலக அங்கத்துவக் கட்டணத்தில் கழிவொன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
எமது கற்கைநெறிகளை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலில் தொடரும் எண்ணம் உங்களுக்கு இருப்பின் - உங்கள் ஆங்கில மட்டத் தேர்வுகளை இப்பொழுது ஒன்லைனில் குறைக்கப்பட்ட கட்டணத்தில் பதிவு செய்யலாம். எமது பதிவிற்கான படிமுறையை வாசித்தறிந்து உங்கள் தேர்வுக்குப் பதிவு செய்யுங்கள்!