IELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)
பத்து வாரங்கள் நீடிக்கும் இவ் 40 மணித்தியால் கற்கைநெறி உயர்தர ஆங்கிலத்தை பரீட்சார்த்திகளுக்கு வழங்கி அவர்களை IELTS கல்விசார் பரீட்சைக்கு தயார் செய்கிறது.
இக் கற்கைநெறியின் பிரதான நோக்கம் கல்விசார் எழுத்தாற்றல் மற்றும் சரளமான> திருத்தமான பேச்சை விருத்தி செய்வதாகும்.
IELTS பரீட்சைக்கான ஆங்கிலக் கற்கைநெறியை (50 மணித்தியாலங்கள்) ஒன்றை பின்பற்றும்போது நீங்கள் :
- உங்கள் வாசிப்பு மற்றும் கிரகித்துக் கேட்டலை விருத்தி செய்வதோடு, நீளமான வாக்கியங்கள் மற்றும் அதிக சிக்கலான வாக்கியப் பரிமாற்றங்கள், விரிவுரைகள் மற்றும் உரையாடல்களை கையாள்வீர்கள்.
- பரீட்சை நுட்பங்களை விருத்தி செய்வீர்கள்
- ஒவ்வொரு வினாத்தாளுக்கும் மாதிரி பரீட்சைகளை மேற்கொள்வதோடு அவற்றுக்கான பின்னூட்டங்களையும் பெறுவீர்கள்
- உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு உங்களை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பெறுவீர்கள்.
நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், கற்கைநெறி ஒன்றை தொடர நீங்கள் பொருத்தமான நிலையில் உள்ளீர்களா என்பதை அறிந்துகொள்ள தகுதிகாண் சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். IELTS பரீட்சைக்கான ஆங்கிலக் கற்கைநெறி Upper Intermediate 1ம் நிலை அல்லது அதனிலும் கூடிய நிலைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.