ஆன்லைன் ஆங்கிலக் கோர்ஸ்: பிரிட்டிஷ் கவுன்சிலின் உலகளாவிய ஆன்லைன் வகுப்பில் சேருங்கள்
உங்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்கு நாங்கள் உதவுவதுடன், பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுதுதல் ஆகியற்றையும் மேம்படுத்த உதவுவோம். இப்போதே சந்தா பெறுங்கள். எங்களின் பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்களின் தனிப்பட்ட அல்லது சிறு குழுவினர் அடங்கிய ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து, ஆங்கில மொழிக்கான உங்கள் இலக்குகளை அடைந்திடுங்கள். நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் அதே உயர்தர அனுபவத்தை எங்களின் ஆன்லைன் வகுப்புகளில் நீங்கள் பெறலாம். உங்கள் வீட்டில் இருந்துகொண்டே ஆங்கிலப் புலமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் அட்டவணையைப் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம். உங்கள் ஆர்வங்கள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப வகுப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- சிறு குழுவினர் அடங்கிய வகுப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அல்லது கூடுதல் உதவியையும் கவனத்தையும் பெற தனிப்பட்ட வகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
- சிறந்த கற்றல் வளங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான வரம்பற்ற அணுகல்.
- பிரிட்டிஷ் கவுன்சிலின் சாதனைச் சான்றிதழைப் பெறுங்கள்.
- ஆசிரியர் மூலம் நடத்தப்படும் இலக்கண வெபினார்கள் (லைவ் 25).
ஆன்லைன் கோர்ஸில் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
English Online மூலம், உங்கள் கற்றல் இலக்குகளை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம், பணியிட ஆங்கிலம் முதல் தினசரி ஆங்கிலம், இலக்கணம், பேச்சு, உச்சரிப்பு மற்றும் பல கருப்பொருட்களில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- பிசினஸ் ஆங்கிலம்: பணியிடத்தில் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் பணி வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
- பொதுவான ஆங்கில வகுப்புகள்: பேசுதல், புரிந்துகொள்ளுங்கள், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றிலான அடிப்படை அறிவைப் பெறலாம்.
- சமூக ஆங்கிலம்: சமூகச் சூழல்களிலும் (எ.கா. பயணம்), பல்வேறு வகையான சூழல்களிலும் மற்றவர்களுடன் எப்படித் தகவல்தொடர்பு செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
இன்றே பதிவுசெய்து, இரண்டு குழு வகுப்புகள் அல்லது ஒரு தனிப்பட்ட வகுப்பை இலவசமாகப் பெறுங்கள்!
உங்கள் பட்ஜெட் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற இணக்கமான கற்றல் அட்டவணையை உருவாக்குங்கள். ஒரு சந்தா திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, இன்றே தொடங்குங்கள்.
நீங்கள் தொடக்க நிலை மாணவராக இருந்தாலும் சரி, மேம்பட்ட நிலை மாணவராக இருந்தாலும் சரி, எங்கள் ஆங்கில மொழிக் கோர்ஸ்கள் எல்லா நிலைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், கவலை வேண்டாம் - English Online மூலம் உங்கள் ஆங்கில நிலைக்கான இலவசத் தேர்வை நீங்கள் எடுக்க முடியும்.