எமது மாணவர்களின் வெற்றியை உறுதி செய்யும் காரணிகளில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அதனாலேயே நாம் அதிசிறந்த தகைமை, அனுபவமுள்ள ஆசிரிய வல்லுனர்களை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் அர்ப்பணிப்போடு செயற்படுகிறோம்.
எமது அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலத்தை சொந்த மொழியாக கொண்டவர்களாக, அல்லது ஆங்கிலத்தில் அதிக புலமை பெற்றவர்களாக இருப்பதோடு சர்வதேச அங்கீகாரம் பெற்ற கற்பித்தல் தகைமைகளைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளையும், இனச் சூழல்களையும் சார்ந்திருப்பது ஒரு சர்வதேச மொழியாக ஆங்கிலத்தின் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது.