சமத்துவம், பல்வகைமை, உள்ளடக்கல் என்பவற்றுக்கான எங்கள் அணுகுமுறை
யக் கழகத்திற் பணியாற்றும் நாம் எமது நிறுவனம் முழுவதிலும் தடைகளை அகற்றி பிரதிநிதித்துவம் செய்தலுமுள்ள கற்பித்தல், கற்றற் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் பல்வகைமையை ஏற்று இனவெறியையும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்து சமத்துவத்தை நிறுவனத்தின் மையமாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நாம் ஒரு நிறுவன கலாசாரத்தை ஊக்குவிப்பதுடன் எமது சகாக்களுக்கும் மாணவர்களுக்கும் எம்முடன் தொடர்புபடும் அனைவருக்கும் அவர்களின் வயது, அங்கவீனம், பாலினம், மதம், நம்பிக்கை, நிறவினம், இனம், கலாசாரம், பாலியல் நாட்டம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் இயலுமையை அடைவதற்கான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்.
எங்கள் கற்பித்தல் அணிகளின் பல்வகைமை
உலகெங்கிலும் உள்ள அனைத்து யக் கழகக் கற்பித்தல் நிலையங்களும் பல்வகைமையுள்ள கற்பித்தல் அணிகளைக் கொண்டிருப்பதற்காக அர்ப்பணிப்பாயுள்ளன. எங்கள் ஆசிரியர்களுக்கு வித்தியாசமான பின்னணிகள், அடையாளங்கள், தேசியங்கள், இனங்கள், மதங்கள் என்பன உள்ளன. யக் கழக ஆசிரியர்களுக்கு ஒரு மிகச் சிறந்த ஆங்கில அறிவு மட்டமுள்ளதுடன அவர்கள் அனைவரும் எங்கள் மாணவர்களுக்கு ஆக உயர்ந்த தரங்களிலான ஆங்கிலம், ஆங்கில மொழிக் கற்பித்தல் என்பவற்றை வழங்கும் பொதுவான இலக்குடன் செயற்படுகிறார்கள்.
எங்கள் மாணவர்களுக்கான பல்வகைமையும் சம வாய்ப்புகளும்
எங்கள் மாணவர்களுக்கு பலதரப்பட்ட தேவைகள் உள்ளன. பல்வகைமையுடன் திறம்படச் செயற்படுவது பிரித்தானியக் கழகத்தின் பணியின் இன்றியமையாத ஒரு பகுதியாக விளங்குவதுடன் அது எங்கள் மாணவர்களின் பல்வேறு தேவைகளுக்கு நேரியதாகத் துலங்குவதைக் குறிக்கின்றது. தனிப்பட்ட சாதனைகளை உச்சப்படுத்தும் ஒரு உயர் தர ஆங்கில மொழி கற்றல் அனுபவத்தைப் பெறுவதற்கு அனைத்து மாணவர்களும் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
சமத்துவம், பல்வகைமை, என்பவற்றுக்கான எங்கள் அர்ப்பணிப்பு
ஒரு உலகளாவிய கலாசார அமைப்பு என்ற வகையில், மக்களை ஒன்றிணைத்து சர்வதேசத் தொடர்புகளை உருவாக்கி, பாதுகாப்பான, நம்பகமான, வரவேற்கத்தக்க ஒரு கற்றற் சூழலில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழலை உருவாக்குவதில் நாங்கள் தனித்துவமான நிலையில் உள்ளோம். வேறுபட்ட கலாசாரங்களில் அர்த்தமுள்ள, நீடித்த, மரியாதையான உறவுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாக எங்கள் பணி விளங்குகின்றது. எங்களுடைய சக ஊழியர்களும் மாணவர்களும் உட்பட எங்களுடன் தொடர்புபடுகின்ற அனைவரிடமும் எந்தவிதமான பாகுபாடடுக்கும் இனவெறிக்குக்கும் எதிராக நாங்கள் உறுதியாக ஒன்றாக நிற்கிறோம்.
சமத்துவம், பல்வகைமை, என்பவற்றுக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். நாங்கள் பாகுபாட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் அனைவரும் நியாயமாக நடாத்தப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம்.