பிரஜைகள் மற்றும் நிறுவகங்கள் மேலும் உள்ளடக்கமான, திறந்த, சுபீட்சமான ஒரு உலகிற்கு பங்களிப்பு செய்வதற்கும், சமூக நடவடிக்கைகள் முதல் பல்வகைமை மற்றும் இளைஞர் விவகாரங்கள் என பலதரப்பட்ட உள்நாட்டு விவகாரங்களை சர்வதேச கருப் பொருட்களுடன் இணைத்து நோக்குவதற்கும் எமது சமூகத்திற்கான செயற்பாடுகள் உதவுகின்றன.
நாம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதோடு, அவ் அமைப்புகள் இளைஞர்களும் சமூக தொழில் முயற்சியும், சம வாய்ப்பு மற்றும் பல்வகைமை, சமூகத் தீர்மானங்கள் மற்றும் ஈடுபாடு, மற்றும் செயற்படும் குடியுரிமை ஆகிய விடயங்களில் நிபுணத்துவத்தைப் பெற்றுத் தருகின்றன.