வெற்றிக்கான ஆங்கிலத் திறன்கள்
Our Secondary Plus course teaches teenagers the skills they need to feel confident communicating in English as a second language. அவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், அவர்கள் கனவு கண்ட அனைத்தையும் அடையவும் தயாராக உலகிற்குச் செல்வார்கள்.
அருமையான கற்றல் அனுபவத்தை வழங்கும் தகுதிவாய்ந்த ஆங்கிலம் கற்பிக்கும் நிபுணர்களால் வழிநடத்தப்படும், இடைநிலை பிளஸ் உங்கள் பிள்ளை முழு ஆற்றலையும் அடைய உதவும்.
பாடநெறி பற்றிய கண்ணோட்டம்
விலை: LKR 48,400/-
காலப்பகுதி: 2 hour 30 min (வாரத்திற்கு ஒரு முறை)
வயது: 12-17 வயது
ஆங்கிலத்தில் திறன்களையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுதல்
பதின்ம வயதினர் எமது அனைத்தையும் உள்ளடக்கிய கற்றல் சூழலில் சுய இயல்புடன் இருக்க முடியும். எங்கள் ஆங்கிலப் பாடநெறிகள் அவர்களை பின்வருவனவற்றுக்கு ஊக்குவிக்கின்றன:
- ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்று உறுதியான, சுதந்திரமான மற்றும் கலாசார விழிப்புணர்வுள்ள உலகளாவிய குடிமக்களாக மாறுதல்
- தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்தவும், ஆங்கிலம் பேசுவதில் நம்பிக்கையைப் பெறவும் உதவுகிறது
- சுய வெளிப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கும் நடைமுறை மற்றும் சவாலான பணிகளில் வேலை செய்தல்
- ஒரே மொழி நிலை மற்றும் வயதைக் கொண்ட வகுப்புத் தோழர்களுடன் குழுப் பணிகளில் ஒத்துழைத்தல்.
பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
இப்பாடநெறி எவ்வாறு வழங்கப்படுகிறது?
நிபுணத்துவ ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டி ஆதரவளிக்கின்றனர், நவீன கற்றல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர், மாணவர்களை நிஜ உலகிலும், பல்கலைக்கழகத்திலும், பணியிடத்திலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தத் தயார்படுத்துகிறார்கள்.
பதின்மவயதினர், பயிலுனர்களுக்கான எங்கள் ஆங்கில மொழி வகுப்புகளில்:
- ஈடுபாட்டுடன், ஊடாடும் செயற்பாடுகளில் பங்கேற்கிறார்கள்
- பேச்சு வகுப்புகளைத் தூண்டி மகிழ்கிறார்கள்
- தகுதிவாய்ந்த ஆங்கில ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
கற்றல் கோட்பாடுகள் எவை?
பாடநெறியின் போது, உங்கள் பதின்ம வயது பிள்ளை பின்வருவனவற்றை பெறுவார்:
- பாடசாலைப் பரீட்சைகளிலும் சர்வதேசப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றி பெறுவதற்கான பயிற்சித் திறன்கள்
- வகுப்பு தோழர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் குழு வேலை மற்றும் தலைமைத்துவ திறன்களை உருவாக்குதல்
- அவர்களின் படைப்பாற்றலை வளர்த்து, பிற கலாசாரங்களைச் சார்ந்த மாணவர்களுடன் தொடர்புபடுத்துதல்.
முன்னேற்றம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
பிரிட்டிஷ் கவுன்சிலில், உங்கள் பின்னூட்டத்திற்கு நாங்கள் செவிமடுக்கிறோம், ஏனென்றால் எங்களுடைய மாணவர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வரவு சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் மொழித்திறன்கள் பற்றிய அறிக்கைகளுடன், உங்கள் பிள்ளையின் முன்னேற்றம் குறித்த வழக்கமான பின்னூட்டங்களை நாங்கள் வழங்குவோம்.
- முறையான மற்றும் முறைசாரா மதிப்பீடுகள் பாடத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
- தனிப்பயனாக்கப்பட்ட ஒன்லைன் டேஷ்போர்டுகள் உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகின்றன.
கல்வியாண்டு முழுவதற்குமான உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தை பின்வரும் விவரங்களுடன் உங்களுக்கு நாங்கள் ஒரு அறிக்கையில் காண்பிப்போம்:
- உங்கள் பிள்ளை படித்த சஞ்சிகைகள் மற்றும் செயற்திட்டங்கள்
- சர்வதேச CEFR தரநிலைகளின் அடிப்படையில் செயற்திட்டப் பகுதி பற்றிய மதிப்பீடு
- மதிப்பிடப்பட்ட காலம் முழுவதிலும் அவர்களின் முன்னேற்றத்தைக் காட்டும் வரைபடமொன்று.
வீடியோவைப் பார்த்து, CEFR தரநிலைகள் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளுங்கள்.
The learning hub and your child’s progress
Our learning hub is a secure online platform that helps your child study independently and at their own pace, before and after class. This means class time is focused on improving their English-speaking and productive skills. Children can enjoy extra activities guided by their teacher, and parents can access data on progress. Find out more in our Parent centre.