புதிய சிந்தனைகளுக்கும் கற்கைக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக நூலகங்களையும் கல்வியையும் வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் எமது சேகரிப்பில் 75,000 க்கு மேற்பட்ட நூல்கள், 110,000 இ-நூல்களின் பயன்பாடு மற்றும் கிட்டத்தட்ட 14,000 இணைய சஞ்சிகைகள் காணப்படுகின்றன.
பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அங்கத்தவராக இணைந்து அதியுயர் தரத்திலான இணைய வெளியீடுகள்> இ-நூல்கள் என்பவற்றின் பயனைப் பெறுவதுடன்> நூல்களை இரவல் பெறுங்கள் மற்றும் அனைத்து கணினிகளின் ஊடாகவும் இலவச இணைய வசதியை அனுபவியுங்கள். அத்துடன் இவ் அங்கத்துவத்தின் மூலம் நீங்கள் நிகழ்வுகள்> சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்க முடியும்.
கொழும்பு, ஒரியன் சிட்டி (கொழும்பு 09), கண்டி அல்லது யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள எமது நூலகங்களில் ஒன்றுடன் இணைந்து பரவசமூட்டும் எமது சேகரிப்பின் பயனைப் பெறுங்கள்.
உங்கள் கற்றல் மற்றும் தகவல் தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் 7 அங்கத்துவ பிரிவுகளை வழங்குகிறோம். இணைந்துகொள்வது மிக எளிதானது. எமது ஆங்கில மொழி நிலையமொன்றில் வழங்கப்படும் விண்ணப்பத்தை நிரப்பி உங்களுக்கு மிகப் பொருத்தமான பிரிவைத் தெரிவு செய்யுங்கள்.
அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள உங்களுக்குத் தேவையானவை:
- பூர்த்தி செய்யப்பட்ட அங்கத்துவப் படிவம்
- அடையாளத்திற்கான ஆவணம் (தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு).
1 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கட்டாயமாக அவர்களது பெற்றோர் / பாதுகாவலரால் முழு நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.
நீங்கள் எமது நூலக உதவி இலக்கமான 011 7521521 ஐ அழைத்து கட்டணக் கழிவு வழங்கப்படும் அங்கத்துவ திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளலாம்.