Image of a customer reading a book at the Kandy library

 கண்டி நூலகமானது நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் DVD கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 15,000 அங்கங்களின் சேகரிப்பைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 4000 நூலக அங்கத்தவர்கள் எமது சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இந் நூலகம் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது: இளம் கற்கையாளர்கள் நிலையம், ஆங்கிலக் கற்கை வலயம் மற்றும் இரவல் பகுதி. நாம் கொண்டுள்ள வெளியீடுகளின் சேகரிப்பு மற்றும் இணைய உலாவுகை வசதி என்பனவும் அநேகமான அங்கத்தவர்களைக் கவர்ந்துள்ளது. 

நாம் நாடகக் கழகம் ஒன்றையும் கலைக் கழகம் ஒன்றையும் கொண்டிருப்பதோடு, வருடம் முழுதும் விசேட தினங்களை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். நாம் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக வெளியக நிறுவனங்களுடன் கூட்டிணைந்து செயற்படுகின்றோம். அத்துடன் நாம் எமது மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு அவர்களது கற்றல் தேவைகளுக்கு உதவும் நோக்கில் இலவச அங்கத்துவத்தை வழங்குகின்றோம்.

எமது நூலக சேகரிப்பை அணுகுங்கள்

உங்கள் பிரத்தியேக பாவனைப்பெயர் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி எமது நூலக சேமிப்பில் நீங்கள் நுழையலாம். நீங்கள் பெற்றுக் கொள்பவை:

  • ஒன்லைனில் உங்களுக்கு தேவையான நூல்களை தேட, முன்பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க முடியும்.
  • நீங்கள் இரவல் பெற்ற நூலக வளங்களைப் பார்வையிடுவதுடன் புதிய வெளியீடுகள் பற்றி அறியலாம்.
  • ஒன்லைனில் நூல்கள் மற்றும் ஏனைய வளங்களின் தற்போதைய இருப்பை உடனுக்குடன் அறியலாம்.

எமது ஆங்கிலக் கற்கை வலயங்கள் மற்றும் இளம் கற்கையாளர் நிலையம்

எமது கண்டி நூலகம் உங்கள் தகவல் மற்றம் கற்றல் தேவைகளை நிறைவு செய்வதற்காக இரு விசேட பகுதிகளைக் கொண்டுள்ளது:

  • எமது ஆங்கிலக் கற்கை வலயமானது (ELZ) ஆங்கில கற்பித்தல் வளங்கள், IELTS மற்றும் Cambridge English  ஆகிய பரீட்சைகளுக்கு உங்களைத் தயார்படுத்தும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஆங்கிலக் கற்கை வலயம் கொண்டுள்ள கேட்டல் மற்றும் கற்றல் பகுதியில் அங்கத்தவர்கள் தமது ஆங்கிலக் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நூல்கள் மற்றும் CD களின் பாரிய சேகரிப்புக்கு மேலதிகமாக ஆங்கிலக் கற்கை வலயம் பகுதி உங்கள் பேசும் ஆற்றலை விருத்தி செய்வதற்கான பயிற்சி முகாம்கள், நூலக அங்கத்தவர்கள் மற்றும் அங்கத்தவர் அல்லாதோருக்கான நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளையும் நடாத்துகின்றது. 
  • எமது இளம் கற்கையாளர் நிலையம் (YLC) ஆங்கிலக் கற்கையை மேற்கொள்ளும் சிறுவர்களுக்கு கணினி பாவனையை வழங்குவதோடு 5000 க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களைக் கொண்டுள்ளது.  நாம் பலதரப்பட்ட பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்வதோடு, சிறுவர்கள் ஆரம்ப வயது முதல் வாசிப்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கும் புத்தகங்கள் மீது வாழ்க்கை முழுதும் தொடரும் நேசத்தை உருவாக்குவதற்கும் உதவும் வாசிப்பு நிகழ்ச்சிகள், கருத்துப் பரிமாற்ற கதை சொல்லல்கள் என்பன இவற்றுள் அடங்கும்.

11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கட்டாயமாக அவர்களது பெற்றோர் / பாதுகாவலரால் முழு நேரமும் கண்காணிக்கப்படல் வேண்டும். 

நாம் திறந்திருக்கும் நேரங்கள்

கண்டி நூலகமானது எமது கண்டி ஆங்கிலக் கற்கை நிலையம் அமைந்திருக்கும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது. 

விசாரணைகளுக்கு:

செவ்வாய் முதல் சனிக்கிழமை - 9.00 - 17.30
ஞாயிறு - 9.00 - 15.00.

கொடுப்பனவுகளுக்கு: 

செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை - 9.00 - 16.00
ஞாயிறு - 9.00 - 14.00.

எமது கட்டணங்கள்

Overdue charges
Per Book - ரூ. 20 (per day)
Per DVD - ரூ. 50 (per day)
Per IELTS book - ரூ. 450 (per day)
எமது கட்டணங்கள்
முன்பதிவு செய்த அங்கங்கள் - ரூ. 25 (per item) 
தொலைந்த அங்கத்துவ அட்டையை மாற்றீடு செய்தல் - ரூ. 500
இரவல் வாங்கிய அங்கத்தின் பார்கோட் இழப்பு - ரூ. 100 (per barcode)
Lost/damaged library material - charges will be calculated accordingly to the value of the item and a 40% handling charge.

கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

கொடுப்பனவுகளை காசாக> கார்ட் அல்லது காசோலை மூலம் செவ்வாய் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 04.00 வரையிலும் மற்றும் ஞாயிறு மு.ப. 9.00 – பி.ப. 02.00 வரையிலும் நூலகத்தில் மேற்கொள்ள முடியும்.