பதிவை பூர்த்திசெய்வதற்கு பின்வரும் நான்கு படிமுறைகளைப் பின்பற்றவும்:
கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள கற்கைநெறிகளுக்கு
படி 1 – ஆலோசனை ஒன்றிற்கு முன்பதிவு செய்யுங்கள்.
- உங்களுக்கு மிகச் சரியான கற்கை நெறியைத் தெரிவுசெய்ய எமக்கு உதவுவதற்கு, நீங்கள் எம்முடனான ஆலோசனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
- நீங்கள் ஒன்லைனில் உங்கள் ஆலோசனைக்கு முன்பதிவு செய்து, உகந்த திகதி மற்றும் நேரத்தைத் தெரிவு செய்யலாம்.
- ஆலோசனை இலவசமானது.
படி 2 – தரநிலை பரிசோதனையைப் பூர்த்தி செய்யுங்கள்.
- நீங்கள் ஆலோசனை ஒன்றிற்கு முன்பதிவு செய்ததும், தரநிலைப் பரிசோதனை பற்றிய தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
- உங்கள் ஆலோசனைக்கு முன்பதாக நீங்கள் தரநிலை பரிசோதனையைப் பூர்த்திசெய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு சரியான கற்றை நெறியைத் தெரிவுசெய்ய எம்மால் உதவ முடியும்.
- நீங்கள் தொலைபேசி ஆலோசனை ஒன்றைத் தெரிவு செய்தால், உங்களது தரநிலை பரிசோதனையை ஒன்லைனில் மேற்கொள்ளாம்.
- நீங்கள் நேருக்குநேர் ஆலோசனை ஒன்றைத் தெரிவு செய்தால், உங்களது தரநிலைப் பரிசோதனையை எமது நிலையமொன்றில் மேற்கொள்ளும். கிடைப்பதைப் பொறுத்தே இந்த வசதி வழங்கப்படும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும்.
படி 3 – உங்கள் தொலைபேசி ஆலோசனைக்கு சமுகமளியுங்கள்
- உங்கள் ஆலோசனைச் சந்திப்பின்போது, எமது நிபுணத்துவ ஆலோசகர்களில் ஒருவர் உங்கள் தரநிலைப் பரிசோதனையின் அடிப்படையில் கற்கை நெறிகளுக்கான விருப்பத்தேர்வுகள் குறித்து உங்களுடன் உரையாடுவார்.
- ஆலோசனை 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
படி 4 – கற்கை நெறி ஒன்றிற்காகப் பதிவு செய்யுங்கள்.
ஆலோசனை முடிவடைந்த பின்னர், நீங்கள் பதிவினைச் செய்து, உங்களது கற்கை நெறிக்கான கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும் தகவல்களுக்கு
உங்கள் ஆலோசனையை முன்பதிவு செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எங்கள் ஆங்கில மொழி கற்பித்தல் மையத்தில், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளுங்கள்.