Boy reading a book and smiling

கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அங்கத்தவராக இணைந்து இணைய வெளியீடுகள் மற்றும் இ - நூல்கள் உட்பட உயர்தர ஒன்லைன் வளங்களைப் பெறுங்கள், நூல்கள்/CD/DVD என்பவற்றை இரவல் பெறுங்கள் மற்றும் நூலகத்தின் அனைத்து கணினிகளின் ஊடாகவும் இணையத்தைப் பயன்படுத்துங்கள். அத்துடன் இவ் அங்கத்துவம் சொற்பொழிவுகள் மற்றும் பயிற்சி முகாம்கள் என்பவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகளில் நீங்கள் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது.  

 

 இந் நூலகம் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டமைந்துள்ளது: இளம் கற்கையாளர் நிலையம், ஆங்கிலக் கற்கை வலயம் மற்றும் இரவல் பகுதி. நாம் கொண்டுள்ள பருவகால வெளியீடுகளின் சேகரிப்பு அநேகமான அங்கத்தவர்களை கவர்வதோடு, அங்கத்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இணைய உலாவுகை வசதியும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற ஒரு அம்சமாகும்.

 

அத்துடன் எமது மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு அவர்களது கற்றலுக்கு உதவும் நோக்கில் இலவச அங்கத்துவத்தை நாம் வழங்குகின்றோம்.  

எமது பரவசமூட்டும் நூலகத்தில் இணைந்து பின்வரும் நலன்களைப் பெறுங்கள்:

  • தொடர்ந்து அதிகரிக்கும் 75,000 க்கு மேற்பட்ட நூல்களின் சேகரிப்பு மற்றும் ஒன்லைன் வளங்கள்
  • பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கிய 50,000 க்கு மேற்பட்ட அண்மைக்கால நூல்கள்
  • English, IGCSE, O-level  மற்றும் A-level ஆகிய பல்வேறு பரீட்சைகளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவும் வளங்கள் 
  • CD மற்றும் DVD களின் பாரிய சேகரிப்பு
  • விசேடமாக வடிவமைக்கப்பட பயிற்சி முகாம்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வாசிப்பு செயற்பாடுகள்

எமது நூலக சேகரிப்பை அணுகுங்கள்

பதிவு செய்ததும், உங்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக பாவனைப் பெயர் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி எமது நூலக சேகரிப்பை பார்வையிடலாம். உங்களுக்கு கிடைக்கும் நலன்கள்:

  • ஒன்லைனில் உங்களுக்கு தேவையான நூல்களைத் தேட, பதிவு செய்ய மற்றும் நீங்கள் இரவல் பெற்ற நூல்களை புதுப்பிக்க முடியும்.
  • நூலக வளங்களைப் பார்வையிடுவதுடன் புதிய வெளியீடுகள் பற்றி அறியலாம்ஒ
  • வளங்களின் தற்போதைய இருப்பை உடனுக்குடன் அறியலாம்.

எமது ஆங்கில கற்கை சேவைகள் (ELS) மற்றும் சிறுவர் பகுதி

எமது கொழும்பு நூலகம் உங்களது தகவல் மற்றும் கற்றல் தேவைகளை நிறைவு செய்வதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இரு பகுதிகளை கொண்டுள்ளது: 

  • எமது ஆங்கில கற்றல் சேவைகள் (ELS)  ஆனது ஆங்கில மொழி கற்பித்தல் வழிமுறைகள், IELTS மற்றும் Cambridge English பரீட்சைகளுக்கு உங்களைத் தயார்படுத்த உதவும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஆங்கில கற்கை சேவைகள் பகுதி கொண்டுள்ள செவிமடுத்தல் கூடங்களில் அங்கத்தவர்கள் தமது ஆங்கில கேட்டல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நூல்கள் மற்றும் CD களின் பாரிய சேகரிப்புக்கு மேலதிகமாக ஆங்கில கற்கை சேவைகள் பகுதி பலதரப்பட்ட பயிற்சி முகாம்கள், நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளை நூலக அங்கத்தவர்கள் மற்றும் அங்கத்தவர் அல்லாதோருக்காக முன்னெடுக்கிறது.
  • எமது சிறுவர் பகுதி ஆங்கிலம் கற்கும் சிறுவர்களுக்கு கணினியின் பயன்பாட்டை வழங்குவதோடு, 15000 க்கு மேற்பட்ட சிறுவர் நூல்களைக் கொண்டுள்ளது. நாம் பலதரப்பட்ட பயிற்சி முகாம்களை ஒழுங்கு செய்வதோடு, சிறுவர்கள் ஆரம்ப வயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கும், புத்தகங்கள் மீது வாழ்க்கை முழுதும் தொடரும் நேசத்தை உருவாக்குவதற்காகவும் வாசிப்பு நிகழ்வுகள், கருத்துப் பரிமாற்ற கதை சொல்லல்கள் என்பவற்றை நடாத்துகின்றோம்.

11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கட்டாயமாக அவர்களது பெற்றோர் / பாதுகாவலரால் முழு நேரமும் கண்காணிக்கப்படல் வேண்டும்.

திறந்திருக்கும் நேரங்கள் மற்றும் இடம்

கொழும்பு நூலகம் இல.49, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 3 எனும் முகவரியில் அமைந்துள்ளது. (கூகிள் வரைபடத்தில் அமைவிடத்தை பெற்றுக்கொள்ள link ஐ அழுத்தவும்) 

 

நாம் திறந்திருக்கும் நேரங்கள் 

09.00 - 18.00. 

 

செவ்வாய் முதல் சனி:

09.00 - 16.30.

மேலதிக நாள் கட்டணங்கள், ஏனைய கட்டணங்கள்

தாமதமாக நூல்களை திருப்பி கொடுக்கும்போது உள்ள கட்டணங்கள் 
Per Book - ரூ. 20  (per day)
Per DVD - ரூ. 50 (per day)
Per IELTS book - ரூ. 450 (per day)
எமது கட்டணங்கள்
முன்பதிவு செய்த அங்கங்கள் - ரூ. 25 (per item) 
தொலைந்த அங்கத்துவ அட்டையை மாற்றீடு செய்தல் - ரூ. 500
இரவல் வாங்கிய அங்கத்தின் பார்கோட் இழப்பு - ரூ. 100 (per barcode)
தொலைந்த / சேதமடைந்த நூலக அங்கம் - புத்தகத்தின் பெறுமதிக்கேற்ப கட்டணம் அறவிடப்படும்

கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

கொடுப்பனவுகளை காசாக, கார்ட் அல்லது காசோலை மூலம் செவ்வாய் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 05.30 வரை மற்றும் ஞாயிறு மு.ப. 9.00 – பி.ப. 04.00 வரை நூலகத்தில் மேற்கொள்ள முடியும்.