உங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? எமது புதிய IVR சேவை மூலம் விரைவாகவும் இலகுவாகவும் எவ்விடத்திலும் ஆங்கிலம் கட்கும் வசதியை வழங்குகிறது.
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மொபைல் தகவல் வல்லுனர்களான z-Messenger ஆகியோர் இணைந்து, உங்கள் ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்கும் IVR முறையிலான சேவையை வழங்குகிறார்கள். “பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஆங்கிலம் கற்போம்” IVR சேவை இப்பொழுது இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட மொபைல் சேவை வலையமைப்புகளில் கிடைப்பதோடு, இணைந்துகொள்ள கீழுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் இணைந்து கொண்டதும், உங்கள் இலக்கண மற்றும் சொற்தொகுதி ஆற்றல்களை பயிற்சி செய்ய முடிவதோடு, அவசியமான கற்கை நுணுக்கங்களையும் பெறுவீர்கள்.