உங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? எமது பிரபல்ய குறுந்தகவல் (SMS) சேவை நீங்கள் எங்கிருந்தாலும் விரைவாகவும் இலகுவாகவும் ஆங்கிலம் கற்பதற்கு உதவுகிறது. (கட்டணங்களுக்கு உட்பட்டது)
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மொபைல் தகவல் வல்லுனர்களான z-Messenger ஆகியோர் இணைந்து, உங்கள் ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்கும் SMS முறையிலான சேவையை வழங்குகிறார்கள். “பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் கற்போம்” குறுந்தகவல் (SMS) சேவை இப்பொழுது இலங்கையின் அனைத்து மொபைல் சேவை வலையமைப்புகளிலும் கிடைப்பதோடு, இணைந்துகொள்ள கீழுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் இணைந்து கொண்டதும், உங்கள் இலக்கண மற்றும் சொற்தொகுதி ஆற்றல்களை பயிற்சி செய்ய முடிவதோடு, Elementary முதல் Advanced வரையிலான அனைத்து நிலைகளுக்கும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அவசியமான கற்கை நுணுக்கங்களைப் பெறுவீர்கள்.