Using an ipad with LearnEnglish mobile apps
Using an ipad with LearnEnglish mobile apps

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆங்கிலக் கற்கைக்கான இலவச ஒன்லைன் கற்கை அங்கங்களின் தெரிவை பார்வையிடுங்கள்.

செயற்பாடுகளின் ஊடாக ஆங்கிலம் கற்றிடுங்கள்

நீங்கள் வயது வந்தவர்களுக்கான பிரிட்டிஷ் கவுன்சிலின் இலவச இணையத்தளத்தின் உதவியுடன் ஒன்லைனில் ஆங்கிலம் கற்கலாம். இத் தளம் ஒலிப்பதிவு, எழுத்தாக்கம் மற்றும் வீடியோ பதிவுகளுடன் 2000 க்கு மேற்பட்ட வழிகாட்டல் பயிற்சிகள் அடங்கிய நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளது.

நீங்களும் அங்கத்தவர் ஒருவராகி தளத்திற்கு பங்களிப்பு செய்வதோடு, ஏனைய பாவனையாளர்களுடன் தொடர்புகொள்ள மற்றும் இலவச வள ஆதாரங்களை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்வதற்கும் முடியும்.

ஆங்கிலம் கற்போம் இணையத்தளம்

விளையாட்டுகளின் (Games) உதவியோடு ஆங்கிலம் கற்றிடுங்கள்

விளையாட்டுகள் மற்றும் நகைச்சுவைகளின் துணையுடன் நீங்கள் குதூகலமாக ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலப் பயிற்சிக்கு உதவ அல்லது மகிழ்ச்சியாக பொழுதை போக்க அனைத்து ரசனைகளுக்கும் ஏற்ற விளையாட்டுகள் இங்கு கிடைக்கிறது. அத்துடன் நீங்கள் விளையாட, பொழுதுபோக்கிட மற்றும் கற்பதற்கு ஏற்றவகையில் நூற்றுக்கணக்கான படங்கள் அடங்கிய நகைச்சுவைகளும் கிடைக்கின்றன.

LearnEnglish  இணையத்தளம் : வேடிக்கை மற்றும் விளையாட்டுகள்

ஒலிப்பதிவு மற்றும் வீடியோ பதிவுகளுடன் ஆங்கிலம் கற்றிடுங்கள்

மொழிப் பயிற்சிக்காக அதிக அளவிலான ஒலிப்பதிவு மற்றும் வீடியோ அங்கங்களை நாம் கொண்டுள்ளோம். இவ் அங்கங்களில் ஒலிப்பதிவு கதைகள், ஒலிப்பதிவு நாடகத் தொடர், BBC உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆங்கில மொழி கற்பித்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடர் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எவ்வாறு சரியாக வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வீடியோக்கள் என்பன அடங்கும்.

LearnEnglish இணையத்தளம் : கேட்டல் மற்றும் பார்வையிடல்

உங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்றிடுங்கள்

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலக் கற்கைக்காக பரந்த அளவிலான மொபைல் அப்களை தயாரித்திருப்பதோடு iPhone, iPad, Nokia, Samsung, Ovi  மற்றும்  Android ஆகிய வேறுபட்ட சாதனங்களுக்கு இவை கிடைக்கின்றன. இவ் அப்கள் யாவும் உங்கள் இலக்கணம், சொற்தொகுதி மற்றும் உச்சரிப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஒலிப்பதிவுகள், தொடர் நாடகம், புதிர்கள், விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளன.

LearnEnglish இணையத்தளம் : Apps

சிறுவர்களுக்கான Learn English Kids

இது ஆங்கிலம் கற்கும் 5 – 12 வயது கொண்ட சிறுவர்களுக்கான சுவாரஷ்யமான கல்விசார் இணையத்தளமாகும். இங்கு ஒன்லைன் சொற்தொகுதி மற்றும் இலக்கண விளையாட்டுகள், பாடல்கள், கதைகள், வீடியோக்கள் மற்றும் இலக்கிய ஆற்றலை விருத்தி செய்யும் பல்வகை செயற்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இத் தளம் பெற்றார் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் நூற்றுக்கணக்கான இலவச  அச்சுப்பிரதிகள் மேற்கொள்ளக்கூடிய பல வள ஆதாரங்களையும் தமது பிள்ளைகள் வகுப்பறைக்கு வெளியிலும் ஆங்கிலத்தை ஆர்வமாகக் கற்கவேண்டும் என நினைக்கும் பெற்றாருக்கு உதவும் பகுதியையும் கொண்டுள்ளது.

LearnEnglish சிறுவர் இணையத்தளம்

பதின்ம வயதினருக்கான Learn English

நீங்கள் ஆங்கிலக் கற்கையை மேற்கொள்ளும் பதின்ம வயது கொண்டவரா அல்லது உங்கள் பதின்ம வயது பிள்ளைகள் ஆங்கிலம் கற்கின்றனரா? பதின்ம வயதினருக்கான Learn English இணையத்தளம் 13 – 17 வயது கொண்டவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் தளத்தில் மொழிப்பயிற்சி, பரீட்சை நுணுக்கங்கள் மற்றும் இலக்கணம்,சொற்தொகுதிக்கான ஒத்துழைப்பு அத்தோடு வேடிக்கையான செயற்பாடுகள், வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் புதிர்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பதின்ம வயதினருக்கான Learn English இணையத்தளம்

வணிக ஆங்கிலம்

நீங்கள் ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவராக இருப்பினும் உங்கள் வணிக ஆங்கிலத்தை விருத்தி செய்ய நினைக்கும் ஒருவரா? உங்கள் வணிக ஆங்கிலம் போதியளவு தரமானதாக உள்ளதா என்ற ஐயம் உங்களுக்கு உள்ளதா? ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக உள்ள சர்வதேச தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? உங்கள் வணிக ஆங்கிலத்தை மேம்படுத்தும் பொருத்தமான வளங்களை நாம் கொண்டுள்ளோம்.

LearnEnglish இணையத்தளம் : வணிகம் மற்றும் தொழில்

Premier Skills English (உதைபந்துடன் ஆங்கிலம் கற்றிடுங்கள்)

நீங்கள் ஆங்கிலம் கற்பவராகவும் உதைபந்தில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பின், Premier Skills English ப்ரீமியர் லீக் கழகங்கள் மற்றும் வீரர்களைப் பற்றி அறிந்துகொள்வதோடு உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்தலாம். அத்தோடு நீங்கள் போட்டிகளைப் பற்றி அறிந்து கொள்ள, ப்ரீமியர் லீக் விதிகளை தெரிந்துகொள்ள, விளையாட்டுகளை விளையாட மற்றும் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முடியும்.

Premier Skills English இணையத்தளம்