உலகின் முன்னணி ஆங்கில வல்லுனர்களுடன் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்!
இரண்டாம் நிலை மாணவர்கள் தமது ஆங்கில வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் கேட்டல் திறன்களை விருத்தி செய்வதற்கும், தமது ஆங்கில இலக்கண அறிவை மேலும் பலப்படுத்துவதற்கும், புதிய சொற்களை அறிந்துகொள்வதற்கும், நாம் தலைப்பு ரீதியிலான கற்கை அங்கங்களை வழங்கி, ஆங்கில தொடர்பாடல் மீதான அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கிறோம். எமது இரண்டாம் நிலைக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் பெறுபேறுகளை அதிகரிப்பதையும், தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதையும் நோக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் போது மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்தல், செயற்திட்ட வேலைகள், தலைப்பு ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் சுயமாக செயற்படுதல் போன்ற விடயங்களில் தமது கவனத்தைச் செலுத்துவர்.